பொது

ஆசியான் நாடுகளின் விமானங்கள் தற்காலிக நிறுத்தங்களைச் செய்வதற்கு அனுமதிக்கப்படும்

22/11/2024 05:49 PM

கோலாலம்பூர், 22 நவம்பர் (பெர்னாமா) -- அடுத்த ஆண்டுக்குள் ஆசியான் நாடுகளின் விமான நிறுவனங்கள் நிர்வகிக்கும் விமானங்கள் இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணங்களைத் தொடர்வதற்கு முன்னர், இவ்வட்டாரத்தில் தற்காலிக நிறுத்தங்களைச் செய்வதற்கு அனுமதிக்கப்படும்.

ஆசியான் உறுப்பு நாடுகளின் எல்லைக்குள் இடையே சுதந்திர போக்குவரத்து உரிமையின் கீழ், ஆசியான் நெறிமுறை ஐந்து வழியாக அந்தப் புதிய கொள்கை அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர், அந்தோணி லோக் கூறினார்.

''வழக்கமாக, ஓர் இலக்குக்கு மட்டுமே செல்வதோடு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப முடியும். ஆனால், இந்த நெறிமுறை 5-இன் கீழ், தற்காலிகமாக வேறு இடத்தில் நிறுத்தலாம். சிங்கப்பூர் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கும் விமானப் பயணம். சிங்கப்பூரில் இருந்து, பாலிக்கு பயணத்தைத் தொடரலாம். தற்காலிகமாக ஒரு நிறுத்தத்தில் இருக்க முடியும், அங்கிருந்து வேறு இடத்திற்கு விமானப் பயணத்தைத் தொடரலாம்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற 30-வது ஆசியான் போக்குவரத்து அமைச்சர்கள் மற்றும் 58-வது மூத்த போக்குவரத்து அதிகாரிகள் (STOM) கூட்டங்களுக்கு தலைமையேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் லோக் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
 

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை