கோத்தா பாரு, 27 நவம்பர் (பெர்னாமா) -- இன்று காலை பாசிர் புத்தே, கம்போங் பன்னிர் பெலிகோங்கில் உள்ள தமது வீடு வெள்ளத்தில் மூழ்கியதில், மின்சாரம் தாக்கி ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், 33 வயதுடைய துவான் முஹமட் சகாரியா துவான் இஸ்மாயில் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காலை மணி 4.55-க்கு தீயணைப்புப் படைக்கு அவசர அழைப்பு கிடைத்த மூன்று நிமிடங்களில் அவர்கள் சம்பவ இடத்தை சென்றடைந்ததாக பாசிர் புத்தே தீயணைப்பு துறை நடவடிக்கை பிரிவு தளபதி முஹமட் ருகிமான் அப் ரஹ்மான் தெரிவித்தார்.
மின்சாரம் தாக்கி கீழே விழுந்த அந்நபர் தமது வீட்டிலிருந்து சற்று தூரம் வரை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தெங்கு அனிஸ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)