விளையாட்டு

பண்டஸ்லீகா கிண்ணம்; தொடர் வாய்ப்பைப் பெற்றது செயின்ட் பௌலி கிளப்

30/11/2024 06:55 PM

ஹம்பர்க், 30 நவம்பர் (பெர்னாமா) -- பண்டஸ்லீகா கிண்ண காற்பந்து போட்டி.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெற்றி பெற்று, பண்டஸ்லீகா போட்டியில் தொடர்ந்து இடம்பெறுவதற்கான வாய்ப்பை செயின்ட் பௌலி கிளப் பெற்றுக் கொண்டது.

சொந்த அரங்கில் விளையாடிய, செயின்ட் பௌலி, ஹோல்ஸ்டீன் கீல் கிளப்புடன் மோதியது.

முதல் பாதி ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து செயின்ட் பௌலி முன்னணி வகித்தது.

முதல் பாதி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்த செயின்ட் பௌலி, 56 மற்றும் 85வது நிமிடத்தில் மேலும் இரு கோல்களை அடித்து தனது வெற்றியை உறுதி செய்து கொண்டது.

தனது ஒரே ஆறுதல் கோலை, ஹோல்ஸ்டீன் கீல் கிளப், கூடுதல் நேரத்தில் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)