பூசான், 01 டிசம்பர் (பெர்னாமா) - நூற்றுக்கும் மேலான நாடுகள் உற்பத்தி கட்டுப்படுத்தலை ஆதரிக்கும் அதே வேளையில், எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒரு சில நாடுகள் நெகிழிக் கழிவுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன.
இதனால், நெகிழி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைக்கான கடைசி நாளான இன்று கடுமையான விவாதம் ஏற்பட்டது.
நெகிழி உற்பத்தியைக் கட்டுப்படுத்தலாமா என்பதை மையமாகக் கொண்ட முக்கிய விவாதத்துடன் பேராளர்கள் சனிக்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மெக்சிக்கோ, பிரான்ஸ், ஆர்வான்டா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்த பனாமாவும் ஃபீஜியும் இதை எதிர்க்கும் நாடுகளை ஒதுங்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தி, ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்தன.
''இந்த ஒப்பந்தம் நம் அனைவரையும் விட பெரியதாக இருக்க வேண்டும். இது இந்த கிரகத்தை காப்பாற்றுவது தொடர்புடையது. இது மனிதநேயத்தை காப்பாற்றுவது. அதனால்தான் நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் நெருக்குதல் அளிக்கிறோம். மேலும், நாங்கள் பூசானை விட்டு வெளியேற வேண்டிய நேர, இறுதிவரை வலியுறுத்துகிறோம். மேலும் ஒரு லட்சிய ஒப்பந்தத்தில் இருந்து நாம் எதிர்பார்ப்பது அல்லது ஏற்பாடுகள் இல்லை என்றால், நாங்கள் மீண்டும் பலதரப்பு செயல்முறைக்கு வருவோம். அதோடு, ஒரு லட்சிய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அதே செயல்முறைக்கு திரும்புவோம்," என்று ஃபிஜியன் காலநிலை அமைச்சர் மற்றும் தலைமை பேச்சுவார்த்தையாளர் சிவேந்த்ரா மைக்கல் தெரிவித்தார்.
தென் கொரியா, பூசானில் நடைபெறும் பேச்சு வார்த்தை ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை காலையில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)