விளையாட்டு

மலேசிய லீக் & பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம் குறித்து ஜோகூரின் இடைக்கால சுல்தான் கருத்து

30/01/2025 07:47 PM

கோலாலம்பூர், 30 ஜனவரி (பெர்னாமா) --   மலேசிய லீக்கின் நிலைமை மற்றும் பராமரிப்பு இல்லாத விளையாட்டு மைதானங்கள் குறித்து ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் கருத்துரைத்துள்ளார்.

விளையாட்டாளர்களுக்குத் தாமதமாக வழங்கப்படும் ஊதியம் உட்பட சொந்த அணிகளின் நலனில் அக்கறை கொள்ளாத ஒரு சில நிர்வாகத்தின் அணுகுமுறைகள் குறித்து அவர் தமது X தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

சொந்த பலவீனங்களை மறைக்க, வேண்டுமென்றே மலேசிய காற்பந்து சங்கம் மற்றும் மலேசிய காற்பந்து லீக் மீது குற்றஞ்சாட்ட விரும்பும் சில தரப்பினர்களையும் அவர் சாடியிருந்தார்.

அணியின் நிதி நிலைத்தன்மையை உறுதிச் செய்ய, தேசிய காற்பந்தில் 'Financial Fair Play' எனும் புதிய திட்டம் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று ஜேடிதி கிளப்பின் உரிமையாளருமான அவர் அறிவுறுத்தினார்.

அதோடு, மலேசிய காற்பந்து சங்கத்தின் கீழ் இல்லாமல் சுயமாக செயல்படும் நடுநிலையான நடுவர் அமைப்பு வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, சில காற்பந்து அணிகள் நிதி சிக்கலை எதிர்கொள்வதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதன் விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் நிலுவையில் தற்போது வரை உள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)