பொது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முவாமலாட் வங்கி சிறப்பு உதவி

01/02/2025 06:19 PM

கோலாலம்பூர், 01 பிப்ரவரி (பெர்னாமா) -- சபா மற்றும் சரவாக் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மலேசிய முவாமலாட் வங்கி நிறுவனம் சிறப்பு உதவிகளை வழங்குகிறது.

கட்டணம் இன்றி பற்று மற்றும் கடன் பற்று அட்டைகளை மாற்றுவது உட்பட தனிநபர் மற்றும் வர்த்தக நிதியுதவிகளுக்கும் மொரோடேரியம் எனப்படும் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தும் கால அவகாச ஒத்திவைப்பு ஆகியவை இதில் அடங்கும் என்று முவாமலாட் வங்கியின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கைருல் கமாருடின் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து தமது தரப்பு அறிந்திருக்கும் நிலையில், இந்த சிறப்பு உதவிகள் அவர்களுக்கு பயனாக இருக்கும் என்று தாங்கள் நம்புவதாக கைருல் கமாருடின் கூறினார்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கியின் அகப்பக்கமான www.muamalat.com.my-இல் எஸ்.ஆர்.எஃப் எனப்படும் சேவை விண்ணப்ப பாரத்தை பதிவிறக்கம் செய்து அது தொடர்பான ஆவணங்களை bantuanbanjir@muamalat.com.my எனும் மின்னஞ்சல் மூலம் சிறப்பு உதவிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப ஒப்புதல் செயல்முறை எளிமையாக்கப்படுவதை உறுதிசெய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆலோசனை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள முவாமலாட் வங்கியின் கிளையை அணுகுவதோடு வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை திரையில் காணும் தொலைப்பேசி எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)