பிரச்சின்புரி, 26 பிப்ரவரி (பெர்னாமா) - தாய்லாந்தின் பிரச்சின்புரி மாகாணத்தில் சுற்றுலாப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்நாட்டின் தலைநகர் பேங்காக்கில் இருந்து கிழக்கே 155 கிலோமீட்டர் தொலைவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்தில், மீட்புப் பணியாளர்களும் மருத்துவ ஊழியர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தாய்லாந்து பிரதமர் Paetongtarn Shinawatra தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இவ்விபத்து குறித்து குறிப்பாக வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்தில் வாகனப் பாதுகாப்புத் தரத்தை உறுதிப்படுத்துவதில் ஏற்படும் பலவீனம் மற்றும் சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாதது போன்றவற்றால் சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவது வழக்கமாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)