உலகம்

ஹோலி பண்டிகை கொண்டாட்ட முன் தயாரிப்புகளில் வட மாநிலத்தோர்

13/03/2025 05:38 PM

புதுடெல்லி, 13 மார்ச் (பெர்னாமா) --   இந்தியாவின் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை கோலாகலமாக தொடக்கம் கண்டுள்ளது.

இந்த வருடாந்திர கொண்டாட்டத்திற்குத் தங்களை தயார் செய்யும் வகையில் வண்ணப் பொடிகள் உள்ளிட்ட அப்பண்டிகையுடன் தொடர்புடைய பாரம்பரிய இனிப்பு வகைகளை வாங்கும் மக்களால் அங்குள்ள சந்தைகள் நிறைந்து காணப்பட்டன.

பனி காலத்திற்கு விடை கொடுத்து, வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் குறிப்பாக ஒருவர் முகத்தில் ஒருவர் வண்ண பொடிகளைப் பூசியும், இனிப்புப் பதார்த்தங்களை விநியோகித்தும் மற்றவர்கள் மீது வண்ண நீர் ஊற்றியும் தங்களின் மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.

புதுடெல்லியின் மொத்த விற்பனை சந்தைகளில், உணவு மற்றும் பானங்கள் ஆகியவை ஹோலி கொண்டாட்டங்களில் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன.

அதிலும், கெட்டியான பால், முந்திரிகள், காய்ந்த பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் “gujyia” என்ற ஒருவகைப் பதார்த்தம் இந்த நாளின் முக்கிய பலகாரமாக கருதப்படுகிறது.

அதிலும் பாரம்பரியமான முறையில் கைவேலைகளால் தயாரிக்கப்படும் இந்த இனிப்பு வகையை வாங்குவதற்குத் தலைநகரில் உள்ள கடைகளில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று காத்திருந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)