உலகம்

சுங்கை கோலோக் தாக்குதல்; 17 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

13/03/2025 06:07 PM

நராதிவாட், 13 மார்ச் (பெர்னாமா) -- தாய்லாந்தின் சுங்கை கோலோக் மாவட்ட அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை  நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 17 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இரண்டு தன்னார்வ பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்ட அத்தாக்குதலில் தொடர்புடைய 17 நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக 9-வது பிரிவு போலீஸ் தலைவர் பியாவாத் சலெர்ம்சி தெரிவித்தார்.

அத்தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் அனைத்து சந்தேக நபர்களும் முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டிருந்தனர் என்றும், கைது ஆணை இருப்பதால், அவர்கள் போலீசாரால் தேடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான முயற்சிகளை போலீஸ் தீவிரப்படுத்தி வருவதாக பியாவாத் குறிப்பிட்டார்.

உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பாதுகாப்பை அதிகரிக்கவும் தொடர் கட்டுப்பாடுகளை போலீஸ் மேம்படுத்தி வருவதாக அவர் விளக்கினார்.

கடந்த சனிக்கிழமை  நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஐவர் பலியானதுடன், 13 பேர் காயமடைந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)