பொது

437 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது

07/04/2025 05:50 PM

ஷா ஆலம், 07 ஏப்ரல் (பெர்னாமா) --   புத்ரா ஹைட்சில் ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மற்றும் சேதம் குறித்த ஆய்வுகளின் மூலம் 437 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதை தொழில்நுட்ப குழு அடையாளம் கண்டுள்ளது.

அதில், 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக சேதமடைந்திருப்பது, 40 விழுக்காட்டிற்கும் குறைவாக சேதமடைந்திருப்பது மற்றும் தீ பரவாமல் பாதிக்கப்பட்டிருப்பது என வகைப்படுத்தப்பட்டிருப்பதாக, டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

81 வீடுகள் முறையே முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ள நிலையில், 57 வீடுகள் தீப் பரவியிருந்தும் அதன் கட்டமைப்பில் சேதம் ஏற்படவில்லை என்றும், எஞ்சிய 218 வீடுகள் பாதிக்கப்படவில்லை என்று அமிருடின் ஷாரி கூறினார்.

"மீட்பு செயல்முறை முழுவதையும் கண்காணிக்க மாநில அரசாங்கத்தின் துணைச் செயலாளர் டத்தோ ஜொஹாரி அனுவாரை நியமிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மீட்பு பணி. சம்பவம் காரணமாக குடியிருப்பு, வீடுகளைப் பழுதுபார்க்கும் செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பை பழுதுபார்க்கும் செலவுகள்", என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டின் இழப்பின் ஆரம்ப மதிப்பீடுகளைத் தொழில்நுட்ப குழுவும் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையும் அடையாளம் கண்டுள்ளதாக அவர் கூறினார்.

மொத்த சேதத்தின் மதிப்பு ஏறக்குறைய 6 கோடியே 54 லட்சமாக பதிவாகியுள்ள நிலையில், 28 கோடியே 59 லட்சம் ரிங்கிட் காப்பாற்றப்பட்டுள்ளதாக, அமிருடின் ஷாரி விவரித்தார்.

எனினும், பொது உள்கட்டமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் குறித்து தற்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக, அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)