பொது

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 47% வரி; அரசாங்கம் மறுப்பு

07/04/2025 07:24 PM

கோலாலம்பூர், 07 ஏப்ரல் (பெர்னாமா) -- நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, மலேசியா 47 விழுக்காடு வரி விதித்துள்ளதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டை, அரசாங்கம் மறுத்திருக்கின்றது.

விதிக்கப்படும் சராசரி வரி விகிதம், சுமார் 5.6 விழுக்காடு மட்டுமே.

ஆகவே, வரியைக் கணக்கிடும் அடிப்படையில் மலேசியா முற்றிலும் உடன்படவில்லை என்றும் அது குறித்த விளக்கம் கோருவதாகவும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறியிருக்கின்றார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற அமெரிக்கா அறிவித்திருக்கும் வரிவிதிப்பு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் தெங்கு சஃப்ருல் அவ்வாறு தெரிவித்தார்.

அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது, அண்மைய வரி விதிப்பு அறிவிப்பின்போது, கூறிய 24 விழுக்காடு வரி விகிதம் குறித்து விளக்கம் பெறுவதற்காக, மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர், எட்கர் டி. ககனையும் தாம் சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)