சுபாங் ஜெயா, 08 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த செவ்வாய்க்கிழமை, புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள், இன்று எட்டாவது நாளாக மேற்கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசாரணை மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை பெர்னாமா தொலைக்காட்சி கண்டறிந்தது.
அரச மலேசிய போலீஸ் படை, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வாகனங்கள் உட்பட லாரிகள் அப்பகுதிக்குள் செல்வதையும் வெளியேறுவதையும் இன்று காண முடிந்தது.
இச்சம்பவத்தினால் சேதமடைந்த வாகனங்கள் பல இழுவை லாரிகள் மூலம் அகற்றப்படுவதையும் காண முடிந்தது.
காலை மணி 8.30 அளவில், தேசிய சட்டத் துறைத் தலைவர் டத்தோ முஹமாட் டுசுக்கி மொக்தார் விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டார்.
அதன் பிறகு, இச்சம்பவம் குறித்து மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முஹமாட் மற்றும் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் ஆகியோருடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அவர் கலந்தாலோசித்தார்.
பொதுப்பணித் துறை மற்றும் தெனாகா நேஷனல் நிறுவனத்தின் அதிகாரிகளும் இவ்விடத்தில் முகாமிட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)