பொது

பொருளாதார வலிமைக்கு ஏற்ப கலையும் கலாச்சாரமும் வலுப்படுத்தப்பட வேண்டும்

08/04/2025 04:40 PM

கோலாலம்பூர், 08 ஏப்ரல் (பெர்னாமா) -- நாட்டின் பொருளாதார வலிமைக்கு ஏற்ப கலை மற்றும் கலாச்சாரம் வலுப்படுத்தப்பட வேண்டும்.

இவ்விரண்டுமே நாகரிக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை என்றும், அவை ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டின் சின்னங்களாக விளங்குவதாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''பொருளாதார வலிமையில் கவனம் செலுத்துவதில் நாம் சில சமயங்களில் ஆர்வமாக இருக்கும்போது, ​​கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் இல்லாமல் நாகரிகத்தின் வளர்ச்சி முடங்கிப்போகும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்,'' என்று அவர் தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில், எழுத்தாளர் இஸ்மாயில் சாயினின் Intermediations: Selected Writings on Art and Aesthetics எனும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் டத்தோ ஶ்ரீ அன்வார் உரையாற்றினார்.

நாகரிக வளர்ச்சியைத் தீர்மானிப்பதில், அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வலிமை உட்பட கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும் என்று அவர் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)