கோத்தா பாரு, 08 ஏப்ரல் (பெர்னாமா) -- உரிய அனுமதியின்றி உணவகத்தில் ஹலால் சான்றிதழைப் பயன்படுத்தியதாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உணவக உரிமையாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கோத்தா பாரு செஷன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
குற்றம் சாட்டப்பட்ட லிம் பெங் கீ எனும் அந்த ஆடவர், அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு அனுமதியோ அல்லது சான்றிதழையோ பெறாமல் தமது உணவகத்தில் உள்ள உணவுகளை ஹலால் என்று வகைப்படுத்தி விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கோத்தா பாரு, ஜாலான் தெமெங்கொங்கில் உள்ள STR Family Restaurant எனும் உணவகத்தில், 2024-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாக, குற்றம் சுமத்தப்பட்டது.
8,000 ரிங்கிட் ஜாமீன் தொகை மற்றும் 10,000 ரிங்கிட் ஜாமீன் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு மே 13-ஆம் தேதி வழங்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)