பொது

சீனா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பினால் மோசமாகியுள்ள வர்த்தகப் போர்

09/04/2025 03:33 PM

கோலாலம்பூர், 09 ஏப்ரல் (பெர்னாமா) --   சீனப் பொருள்களுக்கான வரி விதிப்பை 104 விழுக்காட்டிற்கு உயர்த்தியுள்ள அமெரிக்காவின் செயல், அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போரை மேலும் மோசமாக்கியதுடன் மலேசியா மற்றும் ஆசியான் நாடுகள் உட்பட உலக சந்தையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.

இந்த வர்த்தகப் போர் தற்காலிகமாக இருக்காது என்று, பேங்க் நெகாராவின் முன்னாள் உதவி கவர்னர் டான் ஶ்ரீ ஆண்ட்ரூ ஷெங் தெரிவித்தார்.

இந்த வர்த்தகப் போர் பல ஆண்டுகளாக நீடிக்கக்கூடிய பரந்த புவிசார் அரசியல் போட்டியின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தாம் நம்புவதாக ஷெங் கூறினார்.

இன்று நடைபெற்ற 2025 ஆசியான் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்ட அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

2025-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இரண்டாம் முறை அமெரிக்க அதிபராகப் பதிவியேற்ற டோனல்ட் டிரம்ப், உலக நாடுகள் குறிப்பாக சீனாவை குறிவைத்து மிக அதிகமான வரி விதிப்பை அறிவித்து வரும் நிலையில், அமெரிக்காவை முதலிடத்தில் வைக்கும் முதன்மை நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த வரி விதிப்பிற்கு எதிராக கடைசி வரை போராடும் என்று சீனா தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)