பொது

தன்னை தானே சுட்டுக் கொண்டு கவலைக்கிடமாக நிலையில் போலீஸ் உறுப்பினர்

09/04/2025 03:49 PM

ஜார்ஜ்டவுன், 09 ஏப்ரல் (பெர்னாமா) --   ஜார்ஜ்டவுனில் உள்ள பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் பாதுகாவலர் அறையில், நேற்று மாலை தலையில் தன்னை தானே சுட்டுக் கொண்டதால் காயத்திற்கு ஆளான போலீஸ் உறுப்பினர் இன்னும் கவலைக்கிடமாக உள்ளார்.

கோப்ரல் பதவி கொண்ட அந்த 58 வயதுடைய போலீஸ் உறுப்பினர் பினாங்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மாட் தெரிவித்தார்.

விசாரணையைப் பூர்த்தி செய்வதற்காக வாக்குமூலம் பதிவு செய்ய, போலீஸ் உறுப்பினரின் குடும்பத்தினர் கோலாலம்பூரில் இருந்து திரும்புவதற்கு போலீசார் காத்திருப்பதாக டத்தோ ஹம்சா கூறினார்.

அந்த ஆடவர் எதிர் கொண்டுள்ள கடன் உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக இன்று தொடர்பு கொண்டபோது அவர் குறிப்பிட்டார்.

கோமான்டன் முகாமில் பணி புரியும் அந்தப் போலீஸ் உறுப்பினர், நேற்று மாலை 6.12 மணிக்கு பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் பாதுகாவலர் அறையில் தலையில் படுகாயத்துடன் காணப்பட்டார்.

அவர் தன்னை தானே சுட்டுக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம் செக்‌ஷன் 39-இன் கீழ் இவ்வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)