புத்ராஜெயா, 09 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பாக வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய புவி பொருளாதார கட்டளை மையம், என்.ஜி.சி.சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
அதன் தொடர்பில், இன்றையக் கூட்டத்தில் அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்துரையாடியதாக மடானி அரசாங்க பேச்சாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
எந்தவொரு முடிவும், நாளை நடைபெறவிருக்கும் ஆசியான் பொருளாதார அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தையும், இதர ஆசியான் நாடுகளின் சில தலைவர்கள் உடனான பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் கலந்துரையாடலையும் பொருத்தது என்று டத்தோ ஃபஹ்மி கூறினார்.
''அமெரிக்காவுடனான தூதரக நோக்கத்திற்காகவும் பேச்சு வார்த்தைக்காகவும் வாஷிங்டன்
டி.சி-க்கு நாங்கள் குழுவை அனுப்புவதற்கு முன்னர், திங்கட்கிழமை சில முடிவுகளை எடுக்கவிருக்கிறோம். சரியான தேதியை நான் இங்கு கூற முடியாது. ஆனால், நாளைய மற்றும் திங்கட்கிழமை கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சரவை உறுப்பினர்களின் முடிவையும் அங்கீகாரத்தையும் பொருத்தது'', என்று அவர் கூறினார்.
அக்குழுவை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
அதோடு, அது அமைச்சரவையின் முடிவையும் அங்கீகாரத்தையும் பொருத்தது என்று அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)