ஜோகூர் பாரு, 09 ஏப்ரல் (பெர்னாமா) -- ஜோகூர் பாருவில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையின் மூலம், Job Scam எனப்படும் வேலை வாய்ப்புகள் வழங்குவதாக கூறி மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் மூன்று முக்கிய நபர்களைப் போலீசார் கைது செய்த வேளையில், அதில் பாதிக்கப்பட்ட ஐவர் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் மார்ச் 13-ஆம் தேதி, வேலை வாய்ப்புகள் வழங்குவதாக கூறும் மோசடி குடும்பலுக்கு முகவராக செயல்படுவதாக நம்பப்படும் 19 வயது உள்ளூர் இளைஞர் ஒருவரைப் போலீஸ் கைது செய்ததாக, ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் கூறினார்.
அதோடு, ஜோகூர் பாரு மற்றும் பத்து பகாட் ஆகிய இடங்களில் 18 மற்றும் 25 வயதுடைய மேலும் இரண்டு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.
தாய்லாந்தில், வேலை வாய்ப்புகளைப் பெற்று தருவதாக கூறி தனிநபர்களை ஏமாற்றும் ஒரு கும்பல் மியான்மாரில் தீவிரமாக செயபல்பட்டு வருவது விசாரணையில் கண்டறியப்பட்டதாக எம்.குமார் விவரித்தார்.
8,000 முதல் 15,000 ரிங்கிட் வரையில் லாபகரமான சம்பளத்துடன் தாய்லாந்தில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி தனிநபர்களை ஏமாற்றி வருவதாக அவர் கூறினார்.
எனினும், பாதிக்கப்பட்டவர்கள் தாய்லாந்திற்குச் சென்றதும், மியான்மரில் உள்ள ஒரு தொலைதூர இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலி வங்கி கணக்குகளைத் திறக்க பாதிக்கப்பட்ட மற்றவர்களைத் தேடும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)