பொது

எளிமையான தகுதி தேவைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது I-BAP

09/04/2025 07:57 PM

கோலாலம்பூர், 09 ஏப்ரல் (பெர்னாமா) --   எளிமையான தகுதிகளுடன் விண்ணப்பிக்கும் வகையில் ஏப்ரல் ஏழாம் தேதி தொடங்கி I-BAP எனும் இந்திய சிறு வணிகர்கள் மேம்பாட்டுத் திட்டம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வழி ஒரு லட்சம் ரிங்கிட் வரையிலான உதவித் தொகையை இந்திய வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம்.

ஆண்டுக்கு 300,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான வியாபாரத்தை மேற்கொள்பவர்கள் மட்டுமே I-BAP திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிப் பெற்றவர்கள் என்று முன்னதாகக் கூறப்பட்டிருந்தது. 

எனினும், தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறும், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

வணிக ஆலோசனை சேவை உட்பட நிதி உதவி வழி இந்திய நிறுவனங்களின் திறன்கள் மேம்படுத்தப்படுவதை, SME Corp எனப்படும், SME CORPORATION MALAYSIA மூலம் அமைச்சு செயல்படுத்தப்படும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று  ரமணன் மேலும் குறிப்பிட்டார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)