ஜாலான் அம்பாங், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- தூய்மையான எரிசக்தி புரட்சியில் உலகளாவிய தலைவர்களாக வெளிப்படுவதற்கான பரந்த ஆற்றலை, மலேசியாவும் ஆசிய பசிபிக் வாட்டாரமும் கொண்டுள்ளன.
மூலோபாய புவியியல் இருப்பிடம், ஏராளமான சூரிய ஒளி மற்றும் வலுவான அரசியல் பலம் ஆகியவற்றின் விளைவாக, சூரிய மின் நிலையமாக மாறுவதற்கு மலேசியா நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளதை, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் சுட்டிக்காட்டினார்.
"நாடு முழுவதும் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பெரிய அளவிலான சூரிய மின் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் சுத்தமான எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துவதில் நமது திறனை வெளிக்காட்டுகின்றது. இரண்டாவதாக, ஹைட்ரோஜன் பொருளாதாரமும்
கரிம துறைகளும் மலேசியாவின் கிரீன் ஹைட்ரோஜன் உற்பத்தியில் மூலோபாய முதலீடுகளை வழங்குகின்றது. கரிம தொழில்நுட்பங்கள் எரிசக்தி ஏற்றுமதி, வட்டார ஒத்துழைப்பு மற்றும் தொழில்துறை
ஆகியவற்றிற்கு புதிய வழிகளை வழங்குகின்றன", என்று அவர் கூறினார்.
இன்று, நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபடில்லா அதனை கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவலும் பராமரிப்பும், தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஏற்படும் நிலையான எரிசக்தி மாற்றம், ஆயிரக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)