பொது

வரி விதிப்பு ஒத்தி வைக்கப்பட்ட நாடுகளில் மலேசியாவும் அடங்கும்

10/04/2025 05:00 PM

புத்ராஜெயா, 10 ஏப்ரல் (பெர்னாமா) --    90 நாள்களுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு ஒத்தி வைக்கப்பட்ட 75 வர்த்தக பங்காளி நாடுகளில் மலேசியாவும் அடங்கும்.

இந்நடவடிக்கை மலேசியாவிற்கு சற்று தணிவை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

''ஒத்தி வைக்கப்பட்டதில் மலேசியாவும் அடங்கும். எனவெ, அது சற்று நிம்மதி அளிக்கிறது'', என்று அவர் கூறினார்.

இன்று, புத்ராஜெயாவில் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு, பெட்ராவின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)