கோலாலம்பூர், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று தொடங்கி 16-ஆம் தேதி வரை, துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகளுக்கு வெளியுறவு துணை அமைச்சர் முஹமட் அலாமின் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார்.
4-ஆவது அந்தல்யா அரசதந்திர மாநாடு, ADF மற்றும் 2-ஆவது மலேசியா-அஜர்பைஜான் அரசியல் கலந்தாலோசிப்பு அமர்விற்குத் தலைமையேற்கவும் அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
உலகளாவிய சக்திகளுடன் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டைத் தொடர்வதோடு, ஆசியான் உறுப்பு நாடுகளிடையிலான நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதில் மலேசியாவின் முக்கிய பங்கு குறித்தும், “ASEAN's Evolving Role at Regional and Global Levels” என்ற தலைப்பிலான அக்கலந்தாலோசிப்பு அமர்வில் முஹமட் அலாமின் வலியுறுத்துவார் என்று விஸ்மா புத்ரா, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஆசியானின் மையத்தன்மையை ஆதரிப்பதற்கும், உலகளாவிய நிலப்பரப்புக்கு மத்தியில் நடுநிலையைப் பேணுவதற்கும், இவ்வாண்டு ஆசியானுக்குத் தலைமையேற்றிருக்கும் மலேசிய உறுதிப்பூண்டுள்ளதாக, அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருதரப்பு ஒத்துழைப்பு உட்பட வட்டாரம் மற்றும் அனைத்துலக பிரச்சனைகள் குறித்து விவாதிக்க, தமது சகாவையும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடனும் சந்திப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)