உலகம்

இந்திய நிதி அமைச்சர் இங்கிலாந்து சகாவுடன் சந்திப்பு

10/04/2025 05:47 PM

லண்டன், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் அவரது இங்கிலாந்து சகாவான ரேச்சல் ரீவ்சும் நேற்று சந்திப்பு நடத்தினர்.

அச்சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்க வர்த்தக வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரத்திற்கு, மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்ததை வரவேற்ற நிர்மலா, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்காவின் வர்த்தக வரிகளை எதிர்கொண்டு மந்தமான பொருளாதாரத்தை உயர்த்த இந்தியாவின் நாணயக் கொள்கைக் குழு முயற்சித்து வருகிறது.

இந்தியா, தொடர்ந்து இரண்டாவது முறையாக அதன் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 6 விழுக்காடாக குறைத்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)