பொது

வர்த்தகம் தொடர்பான கவலைகளைத் தீர்க்க ஆசியான் அமெரிக்காவுடன் உரையாடலில் ஈடுபடும்

10/04/2025 05:48 PM

கோலாலம்பூர், 10 ஏப்ரல் (பெர்னாமா) --    தென்கிழக்கு ஆசியக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் உட்பட 168 நாடுகள் மீது வாஷிங்டன் வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, வர்த்தகம் தொடர்பான கவலைகளைத் தீர்க்க ஆசியான் அமெரிக்காவுடன் வெளிப்படையான மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடும்.

இருப்பினும், நேற்று, அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், சீனாவைத் தவிர இதர நாடுகளுக்கு மூன்று மாதங்களுக்கு பரஸ்பர கட்டணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார்.

இன்று நடைபெற்ற சிறப்பு ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் (AEM) கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் அமெரிக்க வரி விதிப்பிற்கு பதிலளிக்கும் வகையில் தங்கள் தரப்பு எந்த பழிவாங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.

ஏப்ரல் 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட கட்டணங்கள் உலக சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போதைய இந்த தற்காலிக நிறுத்தம் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

இறக்குமதி வரிகள் வணிகங்களுக்கு, குறிப்பாக நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, MSME-க்கு குறிப்பிடத்தக்க சவால்களைக் கொண்டுவரும்.

அதோடு, உலகளாவிய வர்த்தக இயக்கவியலுக்கும் இது வழிவகுக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)