கோலாலம்பூர், 10 ஏப்ரல் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டிற்கான கெஅடிலான் கட்சி தேர்தலில் முறைக்கேடுகள் குறித்த புகார்கள் இருப்பின், அதனை அதிகாரப்பூர்வமாக 2025 தேர்தல் புகார்கள் செயற்குழுவிடம் தெரிவிக்கப்பட்ட வேண்டும்.
பெறப்படும் ஒவ்வொரு புகார்களும் முறையே விசாரிக்கப்படுவதோடு, அதற்கான தகுந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கெஅடிலான் தேர்தல் செயற்குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா கூறினார்.
"ஆக, நாங்கள் அதை ஊக்குவிக்க மாட்டோம். எங்களுக்கு வேண்டியது அதிகாரப்பூர்வமாக அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். அந்த புகார்கள் ஜேபிபி செயல்முறையில் வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு எங்களின் அகப்பக்கம் உள்ளது. எங்களுக்குத் தொடர்பு எண் உள்ளது மற்றும் புகார்கள் வழங்கும் குழுவுக்கான இணைப்பும் எங்களின் உள்ளது", என்று அவர் கூறினார்.
பெறப்படும் புகார்களின் உண்மைத் தன்மையை உறுதிச் செய்ய, அதனை முழுமையான செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று டாக்டர் சலிஹா தெரிவித்தார்.
மேலும், எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மற்றும் புகார் அளித்தவர்கள் மீண்டும் அழைக்கப்படுவதோடு, பல செயல்முறைகளும் அமல்படுத்தப்படும் என்றும், அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)