பூச்சோங், 11 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று அதிகாலை பெய்த இடைவிடாத மழையைத் தொடர்ந்து சிலாங்கூரில் உள்ள பல மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் 0.61 மீட்டர் வரை வெள்ள ஏற்பட்டதாகவும், பூச்சோங், கம்போங் தெங்காவில் 20 வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவின் துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அறுவர் புத்ரா ஹைட்ஸ் பள்ளி வாசலில் உள்ள தற்காலிக நிவாரண மையம் PPS-சில் தங்க வைக்கப்பட்டதாக முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
பூச்சோங், கம்போங் ஶ்ரீ அமானில் 120 பேரை உட்படுத்தி 30 வீடுகள் பாதிக்கப்பட்டன.
இதனிடையே, ஷா ஆலம், கம்போங் பாடாங் ஜாவாவில் 20 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மூவர் பாதிக்கப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)