கோம்பாக், 11 ஏப்ரல் (பெர்னாமா) - தேசிய உயர்கல்வி கடனுதவி திட்டம், PTPTN-இன் கடன் விகிதங்கள் மற்றும் அதை திரும்ப செலுத்துவதற்கான விதிமுறைகளை மறுஆய்வு செய்ய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
கடன் பெற்றவர்களுக்கு உதவவும், கடன் அதிகம் நிலுவையில் இருக்கும் பிரச்சனையைக் கையாளவும் இந்நடவடிக்கையாக பரிசீலிக்கப்படுவதாக பிரதமர் டத்தொ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
"PTPTN-இன் நிலுவையில் கடன் கிட்டத்தட்ட 4,000 கோடி ரிங்கிட்டாகும். நாங்கள் அதிகரித்தால் 5,000 கோடி ரிங்கிட் ஆகும். தற்போது நான் அதை நிறுத்தி வைக்க எண்ணம் கொண்டுள்ளேன். மாணவர்களின் தேவைக்காக நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். ஆனால், திருத்தம் செய்ய நாங்கள் ஆர்வம் இழக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். எனது கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன். உதாரணமாக நாம் செய்தால் இதை தீர்க்க முடியும்," என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை ‘Meet Anwar@IIUM: A Special Homecoming’ என்ற நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)