கோம்பாக், 11 ஏப்ரல் (பெர்னாமா) - அமலாக்கத் தரப்பினரால் TCO எனப்படும் பயணக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் கீழ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள நபர்களில் தானும் ஒருவர் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பிரமுகர்கள் அனைவரும் அதே மாதிரியான கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
"நானும் இருக்கிறேன். அனைத்து பிரமுகர்களும் அப்படிதான். நானும் இருக்கின்றேன்," என்றார் அவர்.
கடந்த ஆண்டு தொடங்கி TCO-இன் கீழ், திரெங்கானு மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சம்சுரி மொக்தா அடையாளப்படுத்தப்பட்டிருப்பதால், அவரது நடவடிக்கைகளை சில தரப்பினர் அணுக்கமாக கண்காணிப்பதாக வெளியிட்டிருக்கும் கூற்று தொடர்பில் அன்வார் அவ்வாறு கருத்துரைத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)