கோம்பாக், 11 ஏப்ரல் (பெர்னாமா) - ஆசியானுக்குப் பொறுப்பேற்றிருக்கும் மலேசியா, இதுவரை ஏற்பாடு செய்திருக்கும் ஆசியான் தொடர்பான மாநாடுகள் அனைத்தும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு ஒருங்கமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு கூட்டங்களில், அமெரிக்கா விதித்த வரிவிதிப்பு பிரச்சனையை எதிர்கொள்வது உட்பட ஆசியான் நாடுகளிடையே ஒரு கூட்டு அணுகுமுறையை உருவாக்கியிருப்பதாக ஆசியான் தலைவருமான அன்வார் குறிப்பிட்டார்.
"இந்த வாரம் எங்களுக்கு இரண்டு கூட்டங்கள் இருந்தன. முதலாவது, வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சருடன் இணைந்து கூட்டாக வரிகளை எதிர்கொள்ளும் முடிவு செய்யப்பட்டது. விதிக்கப்படும் வரிகளுக்கு நாங்கள் உடன்படவில்லை எனும் ஒருமித்த கருத்து வெளியானது. தற்போது, சிறிது தணிந்துள்ளது. ஆனால், நாங்கள் கூட்டு அணுகுமுறையை மேற்கொள்கிறோம். பின்னர், நேற்று ஆசியான் நிதி அமைச்சர்களும், அனைவரும் கலந்து கொண்டு ஒரே மாதிரியான கருத்துக்களை தெரிவித்தனர். இது நல்ல முன்னேற்றம். ஆகவே, தற்போது இரண்டு கூட்டங்களை நிர்வகித்தோம். முதலில் வர்த்தக அமைச்சர், பின்னர் நிதி அமைச்சர் மற்றும் ஒவ்வொரு உறுப்பு நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டங்களை நடத்தினோம். அவை நன்கு ஒருங்கமைக்கப்பட்டன," என்றார் அவர்.
இன்று, கோம்பாக், அல் ஷாக்கிரின் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பிரதமர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)