பொது

மக்களிடையே ஆழமான புரிதலை வளர்ப்பதிலும் ஊடகங்கள் முக்கிய பங்களிப்பு

11/04/2025 06:32 PM

கோலாலம்பூர், 11 ஏப்ரல் (பெர்னாமா) - ஊடகத் துறையில் ஆசியான் மற்றும் சீனா இடையிலான வியூக பங்காளித்துவம், உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத்தைக் கடந்து, அதன் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் மக்களை மையமாகக் கொண்ட அம்சங்களை முன்னிலைப்படுத்த வேண்டும்.

அரசாங்கங்களும் நிறுவனங்களும் அரசதந்திர அம்சத்தில் கவனம் செலுத்தும் வேளையில், பொதுமக்களின் கருத்தை வடிவமைப்பதிலும் மக்களிடையே ஆழமான புரிதலை வளர்ப்பதிலும் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தொடர்பு அமைச்சர்  டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

200 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஆசியான் மற்றும் சீனாவில் பன்முகத்தன்மையே, ஊடகங்கள் விளம்பரப்படுத்த வேண்டிய வலிமையான அம்சமாகும் என்று  டத்தோ ஃபஹ்மி  தெரிவித்தார்.

"உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத்தில் அரசாங்கங்களும் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதால், ஊடகங்களும் மனிதர்களின் கதைகளை முன்னிலைப்படுத்த வேண்டும். நமது வட்டார பங்காளித்துவத்திற்கு உயிர் கொடுக்கும் பல்வேறு கலாச்சார நட்புகள், கல்வி பரிமாற்றம், இளைஞர் ஒத்துழைப்பு மற்றும் சமூக மீள்தன்மை ஆகியவற்றின் கதைகள்," என்றார் அவர்.

வெள்ளிக்கிழமை, 2025 ஆசியான்-சீனா ஊடக மற்றும் Think Tank கருத்தரங்கில் உரையாற்றும்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவும் Xinhua செய்தி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கலந்துரையாடலை, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் தொடக்கி வைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)