தாப்பா, 12 ஏப்ரல் (பெர்னாமா) - ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி பெரிய அளவிலான பிரச்சாரங்களில் ஈடுபடாது
அதற்கு பதிலாக, அச்சட்டமன்றப் பகுதியைச் சுற்றியுள்ள வாக்காளர்களைச் கவரும் முயற்சியில் அது களமிறங்கும் என்று தெரிவித்துள்ளது.
அதற்கான களப்பணியை ஆயர் கூனிங் சட்டமன்றத் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பேராக் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ சரானி முஹமட், சில காலத்திற்கு முன்னரே தொடங்கிவிட்டதாக தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
"நாங்கள் எந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு அங்கு உறுதியளிக்கவில்லை. ஆனால் உஸ்தாஸ் யுஸ்ரி தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், வளர்ச்சி தொடரும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மேலும் தற்செயலாக ஆயர் கூனிங் புறநகர்ப்பகுதியில் உள்ளது. எனவே, புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு அங்கு தொடர்ச்சியான உள்கட்டமைப்புக்கான மேம்பாடு குறித்தும் சிந்திக்கலாம்," என்றார் அவர்.
இன்று, தப்பாவில் அமைந்துள்ள மெர்டேக்கா மண்டபத்தில் நடைபெற்ற அச்சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஶ்ரீ அஹ்மட் சாஹிட் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)