தாப்பா, 12 ஏப்ரல் (பெர்னாமா) - ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செயல்முறையில் திருப்தி அடைந்த நிலையில், தங்களது பிரச்சாரத்திற்கும் தயாராகினர்.
நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து, ஆயர் கூனிங் சட்டமன்றத்தில் சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்று தேசிய முன்னணியின் வேட்பாளர் டாக்டர் முஹ்மட் யுஸ்ரி பகிர் தெரிவித்தார்.
"நல்லது. தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணி தேர்தல் கேந்திரங்கள் நல்ல முடிவை கொண்டு வரும்,'' என்றார் அவர்.
அதேபோல, ஆயர் கூனிங்கில் மக்கள் பிரச்சனைகள் அதிகம் இருக்கும் நிலையில், அதில் தாம் கவனம் செலுத்தபோவதாக பிஎஸ்எம் வேட்பாளர் பவானி கன்னியப்பன் கூறினார்.
''வேலை வாய்ப்பு பிரச்சனைகள், செலவுகள், வீடமைப்பு பிரச்சனைகள் உட்பட பல பிரச்சனைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஆயர் கூனிங்கில் தேவை என்று நான் நினைக்கிறேன்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)