ஜெர்மனி, 12 ஏப்ரல் (பெர்னாமா) - லிவர்பூல் கிளப் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.
அவ்வணியில் தொடந்து விளையாடும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பல மாதங்களாக நீடித்து வந்த ஆருடங்களுக்கு முஹமட் சாலா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
2017-ஆம் ஆண்டு முதல் லிவர்பூல் அணியில் விளையாடி வரும் 32 வயதுடைய முஹமட் சாலா, 394 ஆட்டங்களில் 243 கோல்களை அடித்துள்ளார்.
இதன் வழி லிவர்பூல் அணிக்காக அதிக கோல்கள் அடித்த மூன்றாவது விளையாட்டாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.
இப்பருவத்தில் தனது 20-வது வெற்றியாளர் பட்டத்தை குறிவைத்திருக்கும் லிவர்பூல் அணிக்கு இவரின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
லிவர்பூலின் முதன்மை ஆட்டக்காரர்களில் ஒருவரான Trent Alexander-Arnold அக்கிளப்பை விட்டு வெளியேறுவதால், சாலாவை அங்கேயே தக்கவைப்பதற்காக லிவர்பூல் நிர்வாகம் அவரின் ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளதாக கூறப்படுகின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)