ரோக்கபன் - கேப்-மொர்டான், 12 ஏப்ரல் (பெர்னாமா) - மொந்தி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி ஆட்டத்திற்கு ஸ்பெயினின் ALEJANDRO DAVIDOVICH FOKINA தேர்வாகினார்.
காலிறுதி ஆட்டத்தில், உலகின் 42-வது இடத்தில் உள்ள Alejandro Davidovich Fokina, ஆஸ்திரேலியாவின் Alexei Popyrin உடன் விளையாடினர்.
இவ்வாட்டத்தில் 6-3, 6-2 என்ற நேரடி செட்களில், Davidovich Fokina வெற்றி பெற்றார்.
சிறந்த 16 ஆட்டக்காரர்கள் சந்திக்கும் சுற்றில், அவர் பிரிட்டனின் Jack Draper-ரைத் தோற்கடித்து காலிறுதிக்கு தேர்வாகினார்.
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மொந்தி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், Davidovich Fokina இரண்டாவது இடத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில், அவர் ஸ்பெயினின் Carlos Alcaraz உடன் மோதவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)