புத்ராஜெயா, 13 ஏப்ரல் (பெர்னாமா) -- புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மொத்தம் 150 பேர் மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சையகங்களில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
அவர்களில் 120 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில், மேலும் 30 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்துள்ளார்.
''நேற்று மாலை 3.00 மணி வரை நன்றாக உள்ளது. இது சி.பி.ஆர்.சி.யின் அறிக்கையாகும். எங்களின் கே.கே.எம் மருத்துவமனை மற்றும் சிகிச்சையகங்களில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை தற்போது 150 ஆக குறைந்துள்ளது. முன்பு 150-இல் 30 பேர் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 120 பேர் வீடு திரும்ப அனுதிக்கப்பட்டனர். மேலும் தனியார் பிரிவிலும் நான் கவனித்தேன். அந்த 30 பேரில் 17 பேர் இன்னும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 பேரில் 13 பேர் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளிலும், 17 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 17 பேரும், தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,'' என்று அவர் கூறினார்.
அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 21 வயது நபரை, சம்பவம் நிகழ்ந்த இரண்டாம் நாளில் தாம் நேரில் சென்று சந்தித்ததாகவும், அப்போது அவரின் உடல்நிலையில் நலம் பெறுவதற்கான அறிகுறிகள் இருந்ததாகவும் டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள தனியார் துறை உட்பட, அனைத்து நிறுவனங்களுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)