அரசியல்

பிரச்சார நோக்கம்; அரசாங்க கேந்திரங்கள் & ஒதுக்கீடுகளைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை

14/04/2025 04:51 PM

புத்ராஜெயா, 14 ஏப்ரல் (பெர்னாமா) - தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் பிரச்சார நோக்கங்களுக்காக அரசாங்க கேந்திரங்கள் மற்றும் ஒதுக்கீடுகளைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

ஆயர் கூனிங் சட்டமன்றம் உட்பட தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் 33 மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 61 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கிடுவதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர், ஙா கோர் மெங் அறிவித்தது, அச்சட்டமன்றத் தொகுதியில் வேட்மனுத் தாக்கல் நடைபெறுவதற்கு முன்னதாக செய்யப்பட்டது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

"தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர், தேர்தல் வரையில், அது அரசாங்கத்தின் முடிவாகும். அது, வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகென்றால், முடியாது என்று எச்சரிக்க வேண்டும்,'' என்றார் அவர்.

Sentuhan Kasih 3.0 திட்டத்தின் கீழ் 33 பொது மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு 61 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கிடுவதாக கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஙா அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)