ஜார்ஜ்டவுன், 14 ஏப்ரல் (பெர்னாமா) - சூப்பர் லீக் போட்டி...
ஜார்ஜ்டவுன், பண்டாராயா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், கேஎல் சிட்டி எஃப் சி, பினாங்கு எஃப் சி-இடம் 0-1 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் பினாங்கு ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வேளையில், அதன் பலனாக 27ஆவது நிமிடத்தில் Alif Ikmalrizal அவ்வணிக்கான முதல் கோலை அடித்தார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் கேஎல் சிட்டி, Patrick Reichelt மூலம் ஆட்டத்தை சமன் செய்ய முயற்சித்தாலும் offside-டினால் அந்த கோல் ரத்து செய்யப்பட்டது.
ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில் பினாங்கின் இரண்டாவது கோலைப் போடும் முயற்சி எதிர் கோல் காவலர் Muhammad Azri Ab Ghani-இன் ஆட்டத்திறனால் பலனளிக்காமல் போனது.
ஆட்டத்தின் இறுதியில், கூடுதல் கோல் அதுவும் அடிக்கப்படாமல் ஆட்டம், 1-0 என்ற புள்ளிகளில் பினாங்கிற்கு சாதகமாக நிறைவடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் நெகிரி செம்பிலான் 2-1 என்ற புள்ளிகளில் கிளாந்தான் டாருல் நைம் எஃப் சி-ஐ தோற்கடித்தது.
அவ்வணியின் இரண்டு கோல்ககளில் முதல் கோல் ஆட்டத்தில் 42ஆவது நிமிடத்தில் Takumi Sasaki-யாலும், ஆட்டத்தின் இறுதியில் Nasrullah Haniff Johan-னாலும் அடிக்கப்பட்டது.
கேடிஎன் எஃப் சி-இன் ஒரே கோல் நெகிரி செம்பிலான் ஆட்டக்காரர் Nasrullah Haniff-இன் சொந்த கோல் மூலம் கிடைத்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)