கோலாலம்பூர், 14 ஏப்ரல் (பெர்னாமா) -- முன்னாள் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவி இன்றிரவு 7.10 மணிக்கு தேசிய இருதயக் கழகத்தில் காலமானார்.
அத்தகவலை அவரின் மருமகன் கைரி ஜமாலுடின் தமது இன்ஸ்டாகிராம் பதிவின் வழி உறுதிப்படுத்தினார்.
துன் அப்துல்லா அஹ்மட் படாவிக்கு 85 வயதாகும்.
1939ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பினாங்கு, பாயான் லெபாசில் பிறந்த அவர், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் பதவி விலகியதைத் தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி 2009ஆம் ஏப்ரல் 3ஆம் தேதி வரை பிரதமர் பதவி வகித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)