பெர்சியாரான் துவாங்கு ஜஃபார், 15 ஏப்ரல் (பெர்னாமா) - நாட்டின் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் மறைவு நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
துன் படாவியை ஒரு முதலாளியாக மட்டுமின்றி வெளியுறவு அமைச்சராக தாம் பதவி வகித்த காலம் முழுவதும் நல்ல நெருங்கிய நண்பராகவும் அவரை தாம் அறிந்திருந்ததாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் டான் ஶ்ரீ சைட் ஹமிட் அல்பார் வர்ணித்தார்.
"நான் அவருடன் எப்போதும் நெருக்கமாகவே இருப்பேன். வெளியுறவு அமைச்சர் என்ற முறையில் ஒரு முதலாளியாக மட்டுமல்ல, மாறாக சிறந்த நண்பர் என்ற அடிப்படையிலும் நான் அவருடன் எப்போதும் ஒன்றாக இருப்பேன். அவரின் சிறந்த பண்புக்கு அடையாளமாக வெளிநாட்டுத் தலைவர்களும் அவருடன் அணுக்குமான நல்லுறவைக் கொண்டிருப்பதை நான் பார்த்துள்ளேன். அவரின் அணுகுமுறையானது நட்பானது, மாறாக ஆக்ரோஷமுடையது அல்ல," என்றார் அவர்.
மேலும், 'Pak Lah' என்று அழைக்கப்படும் துன் அப்துல்லா படாவியின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்று கூறிய அவர், மக்களுடன் அணுக்குமான நல்லுறவைக் கொண்டிருந்த தலைவரான அவர், தமது பதவிக் காலத்தில் பல்வேறு மாற்றங்களுக்கும் வித்திட்டவர் என்று விவரித்தார்.
மறைந்த துன் அப்துல்லா படாவியின் இல்லமான பைட் படாவி வளாகத்திற்கு வெளியே இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)