பொது

பண்டார் காசியா நெடுஞ்சாலைக்கு துன் அப்துல்லா படாவியின் பெயர்

16/04/2025 05:15 PM

கோலாலம்பூர், 16 ஏப்ரல் (பெர்னாமா) --   காலஞ்சென்ற நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அஹ்மாட் படாவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பண்டார் காசியா நெடுஞ்சாலைக்கு அவரின் பெயரைச் சூட்டுவதற்குப் பினாங்கு மாநில அரசாங்க கூட்ட மன்றம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.

மேலும், வரும் வெள்ளிக்கிழமை அம்மாநிலம் முழுவதும் மாநில கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

2003-ஆம் ஆண்டு தொடங்கி 2009-ஆம் ஆண்டு வரை பிரதமராக பணியாற்றிய துன் அப்துல்லாவின் சேவை மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டுவது மிகவும் முக்கியமானது என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி, பினாங்கு மாநில முதலமைச்சர் சோ கொன் யோவ் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தின் முக்கிய நகராக கருதப்படும் பண்டார் காசியாவுக்கு, 2004-ஆம் ஆண்டு ஆகட்ஸ் 24-ஆம் தேதி துன் அப்துல்லா பெயர் சூட்டியதை சோ சுட்டிக்காட்டினார்.

ஆகவே, அவரை நினைவு கூறும் விதமாக பண்டார் காசியா நெடுஞ்சாலையை, ஜாலான் துன் அப்துல்லா அஹ்மாட் படாவி எனும் மறுபெயரிடுவதற்கு மாநில அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)