சிரம்பான், 17 ஏப்ரல் (பெர்னாமா) -- இம்மாதம் 10-ஆம் தேதி 20 லட்சம் ரிங்கிட் பிணைத் தொகைக் கோரி, பதின்ம வயது பெண்ணைக் கடத்தியது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, மற்றொரு சந்தேக நபர் இன்று தொடங்கி 14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஐம்பது வயதான, அப்பெண்ணுக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை இன்று காலை மஜிஸ்திரேட் ஃபைரூஸ் ஷுஹாடா அம்ரான் பிறப்பித்ததாக, நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர்டத்தோ அஹ்மட் ஜாஃபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.
நேற்று நண்பகல் மணி 12.55 அளவில் செராஸில் அப்பெண் கைது செய்யப்பட்டார்.
1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டம், செக்ஷன் 3 உட்பிரிவு (1)-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி சிரம்பானில் ஓர் இளம் பெண்ணைக் கடத்திய சந்தேக நபர், சிலாங்கூர், கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, 20 முதல் 31 வயதான மூன்று பெண்கள் உட்பட அறுவர் ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கி 14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)