மெட்ரிட், 17 ஏப்ரல் (பெர்னாமா) -- ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணப் காற்பந்து போட்டி.
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மெட்ரிட்டை 2-1 என்ற கோல்களில் தோற்கடித்து, Arsenal அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியது.
கடந்த வாரம் நடைபெற்ற முதல் சுற்று காலிறுதி ஆட்டத்தில், ஆர்சனல் 3-0 என்ற கோல்களில் Real Madrid தோற்கடித்தது.
3 கோல்களுடன் முன்னணி வகித்த Arsenal கூடுதல் பலத்துடன் களமிறங்கியது.
நேற்றைய ஆட்டத்திலும், 2-1 என்ற நிலையில் வெற்றி பெற்றதால், 5-1 என்ற மொத்த கோல்கள் எண்ணிக்கையில், ஆர்சனல் அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.
வெற்றியாளர் லீக் கிண்ணத்தை முதல் முறையாக வெல்லும் இலக்குடன் பயணிக்கும் ஆர்சனல், எமிரேட்ஸ் அரங்கில் நடைபெறவிருக்கும் அரையிறுதி ஆட்டத்தில், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனுடன் மோதவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)