ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம்; சிறு & நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சியடையும்

18/04/2025 08:00 PM

கோலாலம்பூர், 18 ஏப்ரல் (பெர்னாமா) -- ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், JS-SEZ-இல், நியாயமான வாடகை விகிதங்கள், பகிரப்பட்ட வசதிகள், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஆகியவை இம்மண்டலத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், எஸ்.எம்.ஈ இணைந்து வளர்ச்சி அடைந்து மேம்படுவதற்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியிலிருந்து எஸ்.எம்.ஈ-களும் நேரடிப் பலன்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, JS-SEZ உருவாக்கப்பட்டதாக, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

எஸ்.எம்.ஈ-களுக்கு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கில் JS-SEZ-இல் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் கூறினார்.

"விநியோகச் சங்கிலியில் நான்காவது தூணான பார்த்தால், எஸ்.எம்.ஈ மண்டலங்களைப் நாம் பார்ப்போம். எஸ்.எம்.ஈ -களை நாம் மறந்துவிடக் கூடாது. உதாரணமாக, எஸ்.எம்.ஈ மண்டலங்களுக்கு, மலிவு விலையில் வாடகை இடங்களை வழங்குவது, பகிரப்பட்ட வசதிகளும் அங்கு உள்ளன. ஏனென்றால் அனைத்து பெரிய உற்பத்தி அல்லது பெரிய தொழிற்சாலைகளுக்கு அது தேவையில்லை. அவர்கலிடம் அனைத்தும் உள்ளது. எனவே, எஸ்.எம்.ஈ-கள் இதன் மூலம் பயனடைய வேண்டும் என்பதற்காக நாங்கள் செய்திருக்கிறோம். அவர்களுக்கு ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்தி தருவோம். உதாரணத்திற்கு, எஸ்.எம்.ஈ-களுக்கு தொழில்நுட்பம், மேம்பட்ட வசதிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பை வழங்குகிறோம். நாங்கள் அதை உருவாக்குவோம், ஆனால் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்," என்றார் அவர். 

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் விநியோகச் சங்கிலிகள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் விரிவான தீர்வுகளை வழங்கும் என்றும் தெங்கு சஃப்ருல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, இரண்டு முக்கிய வியூக பங்காளிகளான மேபேங்க் மற்றும் CIMB, JS-SEZ மண்டலத்தில் உள்ள நிறுவனங்கள் குறிப்பாக எஸ்.எம்.ஈ-களை இலக்காகக் கொண்டு அவை வர்த்தகத்தை தொடங்கி வலுவான வளர்ச்சி அடைவதற்கான சிறப்பு கடனுதவியை அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]