உலகம்

உக்ரேன்-ரஷ்யா போர்; நான்கு ஆண்டுகள் நிறைவு

25/02/2026 06:51 PM

மாஸ்கோ, 25 பிப்ரவரி (பெர்னாமா) -- உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், உக்ரேனைக் கைவிட மாட்டோம் என்று ஐரோப்பியத் தலைவர்கள் தீர்க்கமாகக் கூறியுள்ளனர்.

தங்களுக்கு கூடுதல் ஆயுதங்கள் விநியோகம் குறித்து குறிப்பிட்ட உக்ரேன் அதிபர் Volodymyr Zelenskiy, மாஸ்கோவிற்கு எதிரான கடுமையான தடைகள் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

அதேவேளையில், ரஷ்ய ராணுவம் உக்ரேன் நகரங்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களின் மூலம் தாக்குதல் மேற்கொள்ளும் போது அவை எரிசக்தி அமைப்புகளை சேதப்படுத்தியதை Zelenskiy சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, தடைச் செய்யப்பட்ட அமைதி செயல்முறையை குறிப்பாக, வட்டார பிரச்சனைகள் மற்றும் ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு நிலையத்தின் கட்டுப்பாடு ஆகியவற்றை உக்ரேன் முறியடிக்க முயற்சிப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், உக்ரேன்- ரஷ்யாவிற்கு இடையிலான போர் நான்கு ஆண்டுகள் நிறைவடைவதைத் தொடர்ந்து, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு, உக்ரேனை ஆதரிக்கும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவிற்கு நெருக்கடி அளித்து வருகின்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)