உலகம்

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; 74 பேர் பலி

19/04/2025 05:10 PM

ராஸ் இசா ,18 ஏப்ரல் (பெர்னாமா) -- ஏமனில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 74 பேர் பலியாகினர்.

மேலும் 171 பேர் காயமடைந்தனர்.
    
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு ஏமனில் உள்ள ஹூத்தி அமைப்பு ஆதரவு வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் படை மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா ஆதரவு வழங்குவதால், செங்கடல் பகுதியில் செல்லும் அமெரிக்காவின் சரக்கு கப்பல்களை ஹூத்தி தாக்கி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹூத்தி தீவிரவாதிகள் உள்ள பகுதிகளில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாக ஹூத்தி வசம் உள்ள சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இத்தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹூத்தி ஏவுகணையை ஏவியதாகவும் அதனை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)