பொது

மலேசிய கிண்ண காற்பந்து போட்டி; இறுதி ஆட்டம் விருந்தாக அமையும்

19/04/2025 06:54 PM

கோலாலம்பூர்,18 ஏப்ரல் (பெர்னாமா) -- 11 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜே.டி.தி-உம், ஶ்ரீ பகாங் அணியும் மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன.

நீண்ட காலத்திற்கு பிறகு இவ்விரு அணிகளும் களம் காணவிருப்பதால், ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டம் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்று, தேசிய காற்பந்து அணியின் முன்னாள் பயிற்றுநர் டத்தோ கே.ராஜகோபால் தெரிவித்தார்.

''இப்போது இரு அணிகளையும் பொறுத்தது. இரு அணிகளுக்கும் அவர்கள் விரும்பும் விளையாட்டாளர்கள் உள்ளனர். நமக்குத் தெரிந்தாலும் அல்லது நீங்கள் யாரைக் கேட்டாலும் ஜே.டி.தி தேர்வாகவுள்ளது. ஆனால் இறுதிப் போட்டியில் எதுவும் நடக்கலாம். காற்பந்து ரசிகர்களாகப் பார்க்க விரும்புகிறோம். ஏதாவது ஒன்றைப் பார்க்க (சிறப்பான ஆட்டம்) விரும்புகிறோம். எல்லோரும் ஆச்சரியமான ஒன்றைப் பார்க்க விரும்புகிறார்கள்,'' என்றார் அவர்.

MYSKILLS அறவாரியம் ஏற்பாடு செய்திருக்கும் 17 வயதுக்கு கீழ்ப்பட்ட காற்பந்து போட்டி தொடர்பாக, அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ராஜகோபால் அவ்வாறு கூறினார்.

2014-ஆம் ஆண்டுக்கான மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், பினால்டி கோல்களின் வழி, ஶ்ரீ பகாங் 5-3 என்ற கோல்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)