கப்பாளா பாத்தாஸ், 21 ஏப்ரல் (பெர்னாமா) -- கல்வியமைச்சின் கீழ் இல்லாத கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர்களின் சீருடையிலும் 'ஜாலுர் கெமிலாங்' சின்னம் இடம்பெறுவது ஊக்குவிக்கப்படுவதாக கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் இதனை கடைப்பிடிப்பதை உறுதி செய்வது மற்றும் அனைத்து தரப்பிடமிருந்து விரிவான ஆதரவைப் பெறுவதுமே இந்நடவடிக்கையின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
''நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இந்த அறிமுகம் தொடங்கப்பட்டது. இதில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மந்திரி புசார்களும் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் பிள்ளைகளின் பள்ளிச் சீருடையில் தேசியச் சின்னம் அணிவதாக உறுதி கொண்டனர். மேலும் கல்வியமைச்சின் செயல்படாத தரப்பினரும் எங்களுடன் இந்த முயற்சியில் கலந்து ஆதரிப்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்'', என்று அவர் கூறினார்.
இன்று, பினாங்கு கப்பாளா பாத்தாசில் உள்ள டத்தோ ஹஜி அப்துல் படாவி இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற ஜாலுர் கெமிலாங் சின்னம் அணியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.
கல்வியமைச்சின் கீழ் உள்ள 53 லட்சம் மாணவர்களும், இன்று தொடங்கி தங்களின் பள்ளிச் சீருடையில் ஜாலுர் கெமிலாங் சின்னத்தை அணிந்திருக்க வேண்டும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)