உலகம்

போப் ஆண்டவர் மறைவு; 9 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

21/04/2025 08:09 PM

வட்டிகன் சிட்டி, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து அவரது இறுதிச்சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறப்பட்டுள்ள வேளையில், உலக தலைவர்கள் பலரும் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு, புதிய போப் ஆண்டவராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பது தற்போது கேள்வியாகி உள்ளது. 

பொதுவாக போப் ஆண்டவர் ஒருவர் இறந்தாலோ, புதிய போப் ஆண்டவர் நியமிக்கப்பட இருந்தாலோ இரகசிய தேர்தல் செயல்முறை நடத்தப்படும் என கூறப்படுகிறது. 

அதாவது போப் ஆண்டவர் பதவி காலியானது முதல் 15-20 நாட்களுக்குள், 80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் உலகம் முழுவதிலுமிருந்து வருகைத் வாரிசைத் தீர்மானிப்பதற்கான ரகசியத் தேர்தல் செயல்முறையான போப்பாண்டவர் மாநாட்டில் பங்கேற்பார்கள்.

வாட்டிகனில் நடைபெறும் தேர்தலின்போது, ஒரு வேட்பாளர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வரை பல சுற்றுகளில் வாக்களிப்பார்கள். 

போப் ஒருவரைத் தேர்ந்தெடுக்காத ஒவ்வொரு சுற்று வாக்களிப்புக்கும், தேவாலயத்திலிருந்து கருப்பு புகை வெளியேறும்.

ஒரு கட்டத்தில் வெள்ளை புகை வெளியேறும் பட்சத்தில் புதிய போப்பின் தேர்வை அது குறிக்கும் என்று கூறப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)