உலகம்

கென்யாவில் 14 வயது சிறுமியை சிங்கம் தாக்கியது

21/04/2025 07:21 PM

நய்ரோபி, 21 ஏப்ரல் (பெர்னாமா) --   ஆப்பிரிக்கா, கென்யாவில் 14 வயது சிறுமியை சிங்கம் கொன்று, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சிறுமியை சிங்கம் தாக்கிய காட்சியை, இளைஞர் ஒருவர் நேரில் பார்த்ததாக கென்யா வனவிலங்கு துறை தெரிவித்தது.

பலியான சிறுமியின் உடல் ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்ட நிலையில், அங்கு சிங்கம் எதுவும் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், சிங்கத்தைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அவர்கள் கூறினர்.

கடந்த வெள்ளிக்கிழமை கென்யாவின் யெரி கவுண்டியில், 54 வயது ஆடவரை யானை ஒன்று தாக்கியது முன்னதாக அப்பகுதி மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)