பொது

சட்டத்தின் அடிப்படையிலே சின் சியூ பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்

21/04/2025 05:19 PM

ஜோகூர் பாரு, 21 ஏப்ரல் (பெர்னாமா) --   பத்திரிகையின் முதல் பக்கத்தில் ஜாலுர் கெமிலாங்கின் முழுமையற்ற விளக்கப்படம் பிரசுரிக்கப்பட்ட விசாரணைக்கு உதவுவதற்காக சின் சியூ டெய்லியின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் கைதானது அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம்-இன் நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும்.

சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, சட்டப்படி எந்தவொரு தரப்பினரையும் தடுத்து வைக்க போலீசாருக்கு அதிகாரம் உள்ளதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சு, பிடிஆர்எம் மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி ஆகியவை மூன்று வெவ்வேறு கோணங்களில் இருந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தும் என்று டத்தோ ஃபஹ்மி கூறினார்.

''முதல் குற்றம் அல்லது இந்த விஷயம் முதன்முதலில் சின் சுவின் பிரசுரிக்கப்பட்ட பதிப்பில் காணப்பட்டது. எனவே, 1984ஆம் ஆண்டு உள்துறை அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டத்தின் முதல் கட்டமாகவும் இது உள்ளது. இரண்டாவதாக, சின்னங்கள் மற்றும் பெயர்களின் அடிப்படையில், 1963-ஆம் ஆண்டு முறையற்ற பயன்பாட்டைத் தடுக்கும் சட்டம் மற்றும் இன்னும் பல சட்டங்களின் கீழ் மீறல் இருந்ததாக நம்பப்படுகிறது'', என்று அவர் கூறினார்.

இன்று, ஜோகூர் பாருவில் உள்ள தாமான் ஶ்ரீ ஸ்கூடாயில் தேசிய தகவல் பரப்பு மையமான நாடியின் தகவல் மையத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, ஜாலுர் கெமிலாங்கின் முழுமையற்ற விளக்கப்படத்தை பிரசுரித்தது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, சின் சியூ டெய்லியின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டதாக கடந்த வியாழக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)